திசங்கரர் ஞானமார்க்கத்திற்கு- அருவ உபாசனைக்கு அத்வைதம் என வகுத்து, பல கிரந்தங்களும் எழுதினார். ஞானமார்க்கத்தை எல்லாராலும் பின்பற்ற முடியாதே என்று, உருவ வழிபாடு என பல தெய்வ உருவங்களுக்குத் துதிகள் செய்தார். வியாச பகவானும் பல உருவ லீலைகள் குறித்து 18 புராணங்கள் செய்தார். ஆதிசங்கரர் உருவ வழிபாட்டுக்கென காணாபத்யம்- கணபதி வழிபாடு, சைவம்- சிவ வழிபாடு, சாக்தம்- சக்தி வழிபாடு, வைணவம்- விஷ்ணு வழிபாடு, கௌமாரம்- குமரன் வழிபாடு, சௌரம்- சூரிய வழிபாடு என அறுவகை நெறிகளை வகுத்தார்.

சாக்த- தேவி வழிபாட்டை ஸ்ரீவித்யா என்பர்.

Advertisment

ஒரே பிரம்மம், பற்பல அசுர வரத்திற்கேற்ப விதவித அவ தாரங்கள் எடுக்க வேண் டியதாகிறது. உதாரணத் திற்கு, இரண்ய கசிபுவை அழிக்க வினோத நரசிம்ம அவ தாரம். இராவ ணேஸ்வரனை அழிக்க மனித ராமாவதாரம்.

கம்சாதியரை அழிக்க குழந்தை கிருஷ்ணா வதாரம்.

கஜமுகாசுரனையழிக்க யானைமுக கணபதி.

குதிரைமுகாசுரனை அழிக்க ஹயக்ரீவ விஷ்ணு.

மஹிஷியை அழிக்க விசித்ர ஹரி- ஹரபுத்திர அவதாரம்.

பண்டாசுரனை அழிக்க மணமான லலிதா அவதாரம்.

அதுபோன்று மகிஷாசுர வம்சத்தை யஅழிக்க சிவ- பிரம்ம- விஷ்ணு சக்திகள் ஒன்றிய கன்னிகை துர்க்காதேவி அவதாரம்

நிகழ்ந்தது. நவராத்திரி விழா இந்த தத்துவத் தைக் கொண்டதே.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதி, விஷ்ணுவின் சக்தியான லட்சுமி, சிவனின் சக்தியான அம்பாள் ஆகி யோர் ஒன்றிய சக்தியே- பராசக்தியே துர்க்கை.

துர்க்கை மகிஷாசுரனை வதைத்து வெற்றிக்கொடி நாட்டிய நாள் விஜயதசமி.

Advertisment

அன்று எந்த புது நல்ல காரியமும் துவங்க மங்கள கரமாக- வெற்றி கரமாக நிகழும்.

போர் என்றால் தனியே போரிடமுடியாது. ஆக, சப்தமாதாக் கள் ஆதிபராசக்தியிடமிருந்து தோன்றி போரில் உதவ, துர்க்கை வெற்றி பெற்றாள். இவர்கள் அவதாரத்தையும் ஆற்றலையும் வெவ்வேறுவிதமாகப் புராணங்களில் காண்கிறோம்.

சப்த மாதாக்கள்

அந்தகாசுர வதம் திருக்கோவிலூரில் நடந்ததாகத் தலபுராணம் கூறுகிறது.

சிவபெருமான் யோகத்தில் ஆழ்ந்திருந் தார். அச்சமயம் அந்தகாசுரன் பார்வதியைக் கைப்பற்ற முனைந்தான். நிலைமையை உணர்ந்த பார்வதி பிரம்மா, திருமால், ஆறுமுகன் மற்றும் தேவர்களை நினைத்தாள். பார்வதி தனித்திருப்பதால், ஆண் வடிவத்தில் செல்லவேண்டாமென்று அவர்கள் சக்தி- வடிவம் கொண்டு சென்றனர்.

Advertisment

பிரம்மன் சக்தி- பிராம்மி; திருமால் சக்தி வைஷ்ணவி; முருகன் சக்தி- கௌமாரி; ஈசனின் சக்தி- சாமுண்டி; அனந்தன் சக்தி- வாராஹி; மஹேசன் சக்தி- மாஹேஸ்வரி.

இச்சக்திகளிலிருந்து பல உபசக்திகளும் தோன்றின. அவர் களை அந்தகாசுரனுடன் போரிடு மாறு கூறினாள் பார்வதி. வெகு உக்ர மான போர். இச்சமயம் சிவபெருமான் யோக நிலையிலிருந்து விடுபட, அந்த காசுரனை சூலத்தால் அழித்தார்.

மார்க்கண்டேய புராணம் இவர்கள் அவதாரத்தை வேறுவிதமாகக் கூறும்.

மஹிஷாசுர வதத்திற்கு பிரம்மா, விஷ்ணு, சிவ சக்திகள் ஒன்றிய ஆதிபராசக்தியாக துர்க்கா தோன்றினாள். சண்டமுண்டர்கள் தேவியின் எழிலில் மயங்கி அவளை அடைய எண்ணினர். துர்க்கா, சரஸ்வதி தேவியைப் போரிடக் கூறினாள். ஆதிபராசக்தியின் முகத்திலிருந்து பிராம்மி, கைகளிலிருந்து வைஷ்ணவி, கழுத்திலிருந்து கௌமாரி, பிருஷ்டபாகத்திலிருந்து வாராஹி, ஸ்தன மண்டலத்திலிருந்து இந்த்ராணி, நெற்றியிலிருந்து சாமுண்டா உதித்தனர். இவர்கள் ஷண்மாதர்கள் ஆவர். இவர்கள் உதவியுடன் சரஸ்வதி, சண்டமுண்டர்களை வென்றாள். மகாலட்சுமியும் சேர்ந்திட மஹிஷாசுரனும் அழிந்தான்.

இவர்கள் தேவியின் நவாவரண சக்கரத் தில் நாற்கோணங்களுடைய த்ரைலோக்ய மோஹன சக்கரத்தில், முதல் ஆவரணத்தில் பூஜிக்கும் வரம் பெற்று, லலிதா தேவிக்கு ஆவரண தேவியாய் சேவை புரிகின்றனர்.

சப்த மாதாக்கள் பற்றி சிந்திப்போமா...

பிராம்மி

அன்ன வாகனத்துடன்கூடிய பிரம்மனின் சக்தி தேவி. புள்ளிமானின் தோலை ஆடை யாக அணிபவள். பிரம்மனைப்போல நான்கு முகம் கொண்டவள். கமண்டலம், ஜப மாலை, புத்தகம் ஏந்துபவள். வாக்தேவி என்பதால் வேள்விகளைக் காப்பவள். மனித உடலில் தோலுக்கு சம்பந்தமுடையவள். எனவே தோல் சம்பந்தமான நோயுடையவர்கள் புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேத னம் செய்து ஏழைகளுக்கு விநியோகித்தால் அன்னை மனம் குளிர்ந்து நோயைத் தீர்ப்பாள்.

மந்திரம்: ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:

ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி: ஓம் ப்ரம்ம சக்த்யை ச வித்மஹே

பீதவர்ணாயை தீமஹி

தந்நோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

மாஹேஸ்வரி

ரிஷப வாகனத்தில் மஹேசன் சக்தியாக உதித்தவள். திரிசூலம், மான், மழு, பிறைச் சந்திரன் தரித்த ஐந்து முகத்தினள். வேத கோஷ ப்ரியை. வேள்விகளைக் காப்பவள். "மஹ' என்றால் வேள்வி. வேள்விகள் நன்கு நடக்க, நல்ல மழைபெய்து தானியங்கள், காய்கனிகள் பெற ஏதுவாகி ஆகாரம் கிடைக்கும். சுபிட்சம் பெருகும்.

உடலிலுள்ள கொழுப்பு சக்திக்குக் காரணமானவள். வெட்டுக்காயம் பட்ட வர்கள் இவளைத் துதித்து, ஏழைகளுக்கு நீர்மோர் விநியோகித்தால், காயங்கள் ஆறி நலம்பெறலாம்.

மந்திரம்: ஓம் மாம் மாஹேஸ்வர்யை நம:

காயத்ரி: ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூலஹஸ்தாயை தீமஹி

தந்நோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்.

கௌமாரி

குமரனின் சக்தி. ஆறு தலைகள், மயில் வாகனம், சேவற்கொடி, பன்னிரு கரங்கள் கொண்டவள். வேல் ஏந்தியவள். சிவந்த நிறம். மிகுந்த அழகு பெற்றவள். சஷ்டி தேவி, தேவசேனா என்றும் பெயர். படைத்தலைவி. ரத்த சம்பந்த வியாதிகள், பசுக்களுக்குத் தோன்றும் கோமாரி எனும் நோய் தீர்க்க இவளை வழிபட்டு ஏழைகளுக்கு எலுமிச்சை சாதம் விநியோகிக்க நலம்பெறலாம்.

மந்திரம்: ஓம் கௌம் கௌமார்யை நம:

காயத்ரி: ஓம் சிசி வாஹனாயை வித்மஹே

சக்த ஹஸ்தாயை தீமஹி

தந்நோ கௌமாரி ப்ரசோதயர்த.

ppp

வைஷ்ணவி

மகாவிஷ்ணுவின் சக்தி. கருட வாகனத் தில் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் ஏந்துபவள். சாந்த முகத்துடன் சகலருக்கும் சகல மங்களங்களும் அளிப்பவள். விஷக்கடி பட்டவர்கள் இவளை வேண்டி, பாயசம் நிவேதனம் செய்து குழந்தைகளுக்குத் தர, நலம்பெறலாம். சைவ சமய நூல்கள் சிவனது பராசக்தி வடிவமே ஆண் ரூபமான விஷ்ணு என்கும். ஆகவேதான் லலிதா சகஸ்ரநாம நாமாவளி "கோவிந்த ரூபிண்யை நம:' என்கிறது.

மந்திரம்: ஓம் வைம் வைஷ்ணவ்யை நம:

ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவி கன்யகாயை நம:

காயத்ரி: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.

(பஞ்சாபில் வைஷ்ணவி தேவி- துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக லிங்க ரூபத்தில் வணங்கப்படுகிறாள். மிக சக்திவாய்ந்த உன்னதத் தலம்.)

வாராஹி

விஷ்ணுவின் வராக அவதார சக்தி அம்சம். வராக (பன்றி) முகம். இவளே தேவியின் படைத்தலைவி. பஞ்சமி, தண்டினி, தண்டநாதா என்றெல் லாம் பெயர். கலப்பை ஏந்துபவள். இவளது ரதம் கிரி சக்கரம். பண்டாசுர வதத்தில் லலிதாவுக்கு சேனாதிபதியாக இருந்தவள். அம்பாசுர யுத்தத்திலும் சண்டிதேவிக்கு சேனாதிபதி. மிகுந்த கோபம், வீரம், தீரம் உடையவள். "வாராஹி பக்தனுடன் வாதாடாதே' என்பர். சிங்கம், மான், பாம்பு ஆகியவை வாகனம். எலும்பு, தோல் நோய் உள்ளவர்கள் இவளைத் துதித்து, முறுக்கு தானமளிக்க நலம்பெறலாம்.

மந்திரம்: ஓம் வாம் வாராஹ்யை நம:

காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வாராஹி ப்ரசோதயத்.

இந்த்ராணி

இந்திரசக்தியின் அம்சம். ஐராவத யானையே வாகனம். 1,000 அஸ்வமேத யாகம் செய்தவனே இந்திரப்பதவியை அடையமுடியும். 33 கோடி தேவர்களுக்கு, அஷ்டதிக் பாலர்களுக்குத் தலைவி. வஜ்ராயுதம் தாங்கியவள். அம்மை நோய் உள்ளவர்கள் வந்தித்து, பலாப்பழம் நிவேதனம், தானம் செய்ய நலமடையலாம். வணங்குபவர்களுக்கு அழகு, தைரியம், வளமுள்ள வாழ்வளிப்பவள்.

மந்திரம்: ஓம் ஈம் இந்த்ராண்யை நம:

காயத்ரி: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ ஐந்த்ரி ப்ரசோதயாத்.

சாமுண்டி

சண்டமுண்ட அசுரர்களை அழித்ததால் அவள் பெயர் சாமுண்டி ஆயிற்று. பிரேத வாகனம். சிவந்த நிறத்தினள். பயங்கர வடிவமுள்ளவள். வீரம்மிக்கவள். சூலாயுதம் தரிப்பவள். வெற்றியைத் தருபவள். சங்கு புஷ்பத்தில் பிரியமானவள். நரம்பின் தலைவி. அவல், சேமியா பாயசம் நிவேதனம் செய்து தானம் செய்தால் ரோகங்களின் வலிமை குறையும். இவளைத் துதிப்பவர்கள் வாழ்வில் எந்தத் துன்பமுமின்றி விளங்குவார்கள்.

மைசூரில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. தஞ்சை பெரம்பூரிலும் சாமுண்டியை தனி கர்ப்பக்கிரகத்தில் காணலாம். இவளை சிவகாளி என்றும் கூறுவர். பிரம்மாவிடம் வரம்பெற்ற தாருகன் எனும் அசுரன், தேவலோகத்தைக் கைப்பற்றி யாவரையும் துன்புறத்த, சப்த மாதாக்களும் சேர்ந்து தாருகனை அழித்த னர்.

மந்திரம்: ஓம் சாம் சாமுண்டாயை நம:

காயத்ரி: ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்.

பல புராதனக் கோவில்களிலும், கிராமக் கோவில்களிலும் சப்த மாதாக்கள் ஒன்றுசேர்ந்து வரிசையாக இருப்பதைக் காணலாம். மகமாயிக் கோவில்களிலும் தனித்து சப்தமாதாக்களைக் காணலாம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அபிஷேக பூஜைகள் செய்து, பொங்கல் நிவேதனம் செய்து தானம் செய்தால் அன்னைமார் அருள்பெறலாம்.

ஷண்மாதாக்கள் வழிபட்ட தலங்கள் என- சக்கரப் பள்ளி- ப்ராம்மி; நந்திமங்கை- வைஷ்ணவி; அரிமங்கை- மாஹேஸ்வரி; தாழமங்கை- மஹேந்த்ரி; சூலமங்கை- கௌமாரி; மன்னமங்கை- சாமுண்டி மேற்கண்டவற்றைக் கூறுவர்.

கரூர்- குளித்தலை அருகேயுள்ள கடம்ப வனேஸ்வரர் கோவிலில் சப்த மாதாக்கள் சிவனுக்குப் பின்பு கருவறையிலேயே இருப்பதைக் காணலாம். அம்பாள் பெயர் பாலகுஜாம்பாள். காவிரி வடக்கு முகமாகச் செல்லும் தலம். எனவே "தக்ஷிணகாசி' என பிரசித்தி பெற்ற தலம்.

நவராத்திரி என்றால் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மும்மூன்று நாட்கள் அவர்கள் சகஸ்ரநாமம் துதித்து மகிழ்வர். துர்க்கா சப்தஸதி பாராயணமோ ஹோமமோ செய்வர்.

லலிதா சகஸ்ரநாமமோ, திரிஸதியோ ஒரு அலாதி...